இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களை நிறுத்தியது தாய்வான்

தாய்வான் நிர்வாகம் புதிய விசா கொள்கைக்கு அமைவாக, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

தாய்வான் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்பட்ட போதிலும், சில காரணங்களுக்காக தாய்வான் செல்ல விரும்பும் இலங்கை பிரஜைகள் தொடர்ந்து விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதன்படி, தாய்வான் அரசு முகவர் நிலையத்தின் உத்தியோகபூர்வ அழைப்பு,பரிமாற்ற நடவடிக்கைகள்,உறவினர்களைச் சந்தித்தல்(மூன்றாம் நிலை இரத்த உறவுகளுக்குள்),வணிகக் தேவைகள்,தாய்வான் கப்பல் பணியில் இணைதல்,மருத்துவச் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கான வீசாக்களுக்கு இலங்கையர்கள் விண்ணப்பிக்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.