மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கொடியேற்றும் நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு வருடாந்தம் இடம்பெறும் ஆடி மஹோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு இவ்வாண்டுக்கான கொடியேற்றும் நிகழ்வு இன்று காலை 8:00 மணிக்கு மேளவாத்தியங்கள் முழங்க, பல்லாயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா என்ற கோசம் வானைப்பிழக்க சிறப்பாக இடம்பெற்றது.













