39 வருட சுகாதார சேவையாற்றிய பிரதம மருந்துக் கலவையாளர் சந்திரமோகன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்!

( வி.ரி. சகாதேவராஜா)

சுகாதாரத் திணைக்களத்தில் கடந்த 39 வருட சேவையாற்றிய கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதம மருந்துக் கலவையாளர் பரமலிங்கம் சந்திரமோகன் இன்றுடன்( 09.07.2026) ஓய்வு பெறுகிறார்.

அவரது சேவையை பாராட்டி கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து பாராட்டு விழாவை இன்று நடாத்துகிறார்கள்.

காரைதீவைச் சேர்ந்த பரமலிங்கம் சந்திரமோகன் முதலில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 3 வருடங்களும் பின்னர் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் 10 வருடங்களும் இறுதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் 26 வருடங்கள் சேவையாற்றி இன்னுடன்(9) ஓய்வு பெறுகிறார்.சமுக செயற்பாட்டாளரான இவர் சமூக, இலக்கிய மற்றும் பண்பாட்டுத் துறைகளிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும்.

கல்முனை வைத்தியசாலை சித்திவிநாயகர் ஆலய பரிபாலனத்தில் ஆணிவேராக திகழ்ந்தார்.

கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் திட்டமிடல் பணிப்பாளராகவும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் இயக்குநர் சபை உறுப்பினராகவும் இருந்து இலக்கிய மற்றும் ஊடக வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

நாளை(10) வெள்ளிக்கிழமை அவரது 60 வது பிறந்த நாளாகும். உகந்தமலை முருகன் ஆலய வழிபாட்டுடன் வைரவிழாவை கொணடாடவிருக்கிறார்.