அஞ்சலிபீடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டை வட்டாரத்திலுள்ள 35ஆம் கிராம பொது மயானத்தில், அப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த அஞ்சலிபீடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  (05) ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​விளாந்தோட்டம், கண்ணபுரம், மற்றும் கண்ணபுரம் கிழக்கு ஆகிய மூன்று கிராமங்களுக்கும் பொதுவான இந்த மயானத்தில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சபை நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட சுமார் 1.5 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் இந்த அஞ்சலிபீடம் அமைக்கப்படவுள்ளது.

​போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் தங்கராசா கயசீலன் அவர்களின் ஏற்பாட்டில், இலங்கை தமிழரசுக்கட்சியின் வழிநடத்தலில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்கள், அஞ்சலிபீடத்திற்கான முதலாம் அடிக்கல்லினை நட்டு கட்டுமானப் பணிகளை முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.

​அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வெல்லாவெளி வட்டார அமைப்பாளர், பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து அடுத்தடுத்த அடிக்கற்களை நட்டு வைத்தனர்.

​அடிக்கல் நடும் நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற சிறப்புரையில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் மற்றும் உப தவிசாளர் தங்கராசா கயசீலன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில்.

​”இப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த அஞ்சலிபீடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

​நிகழ்வின் இறுதியாக, பொது மயானத்தில் அஞ்சலிபீடம் அமைப்பதற்கான உன்னத நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக கிராம மட்ட அமைப்புகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.