நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறையைத் தொடர்ந்துஇ நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் மீண்டும் முதலீடு செய்யுமாறு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு சுயாதீனக் குழு நியமிக்கப்பட்டதை அவர் வரவேற்றுள்ளார்.
அவர் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் குறைந்தது 27 பேர் உயிரிழந்த மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த வன்முறை குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
“உயிரிழந்த அல்லது காயமடைந்த கைதிகள் அரசின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிலேயே இருந்தனர்.
இந்த நிலையில் சிறை அமைப்பில் பணியாற்றுபவர்களும் அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அதிக பாதுகாப்பிற்குத் தகுதியானவர்கள். அந்தப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் அடிப்படைக் கடமையாகும் ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சிறை அமைப்பில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களும் முதலீடுகளும் தேவை என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது
அதேநேரம் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளின் கீழ் இலங்கைக்கு உள்ள கடமைகள் சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு கண்ணியம் மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன என்றும் ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


