எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் பிறிக்கேட் கொமாண்டர் கேணல் ராஜபக்ஸ உடகே தலைமையில் கல்லடி கடற்கரையில் நேற்று மாலை பொசன் அலங்காரப் பந்தல் திறந்துவைக்கப்பட்டது.
அத்தோடு இதன் போது வெளிச்சப் பந்தல்களை பார்க்க வந்த மக்களுக்காக கடலை தன்சலும் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வாறாக திறந்துவைக்கப்பட்ட அலங்கார வெளிச்சக் கூட்டினை பார்வையிட அதிகளவிலான மக்கள் வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


