மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பணிப்பாளருக்கு பிரியாவிடை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.ராஜ்பாபு அவர்களுக்கான பிரியா விடை நிகழ்வு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகியி ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பிரியாவிடை பெற்றுச் செல்லும் பணிப்பாளர் தொடர்பான வாழ்த்துரைகளை நிகழ்த்தியதுடன், பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கடந்த இரண்டரை வருடங்கள் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய இவர் கோரளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.