மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அழைப்பை ஏற்று ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தூதுவர் சாரா ஹசல்பர்த் இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கான விஜயத்தினையும் முன்னெடுத்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் தொல்பொருள் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தெரிவித்திருந்தார்.
மேலும் விசேடமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தினையும் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்து ஆலயத்தின் செயற்பாடுகளை முடக்குகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் முன்னெடுத்த கருத்தாடலின் அடிப்படியில் குறித்த ஆலயம் தொடர்பிலான கள ஆய்வினையும் விசேடமாக மேற்கொண்டிருந்தார்.
குறித்த கள ஆய்வின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி விஜயத்தின் போது ஆலய பரிபாலனசபையினரையும் சந்தித்து குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


