இலங்கையில் தங்க விலை உயர்வு!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (22) அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 384,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் சந்தை தேவைகளின் தாக்கமே இந்த விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.