புரோரின் நிறுவனம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சமூக சேவகர் தியாகி தியாகேந்திரன் ஆகியோரின் பேருதவில் முன்னெடுக்கப்பட்ட இவ் உதவித்திட்ட நிகழ்வில் தேவைப்பாடுடைய சென்னை மக்களுக்கான உணவுப் பொருட்கள்,பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,முதியோருக்கான உதவிப் பொருட்கள்,மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிப் பொருட்கள் மற்றும் தாய்மாருக்கான சிறப்பு நிதி உதவி ஆகியன வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
மிகவும் தேவைப்பாடுடைய நூறு குடும்பங்களுக்கு மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


