வரலாற்று சிறப்புமிக்க தேசத்து பொங்கல் எதிர்வரும் 26ஆம் திகதி மட்டக்களப்பு, பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
ஆனிமாதம் வரும் உத்தரத்தில் நாகதம்பிரானுக்கு பொங்கல் மடைபரவி, பால், பழம் வைத்து பூசை வழிபாட்டில் ஈடுபடுவது சிறப்பாகும். அந்த வகையில் இவ்வாண்டு எதிர்வரும் 22/06/2026 அதிகாலை ஆனி உத்திரத்தில் பால் பழம் வைத்தலும் 26/06/2026 தேசத்து பொங்கலும் இடம்பெறவுள்ள நிலையில் பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று கொடியேற்றம் இடம்பெற்றது.









