நாட்டின் பல பகுதிகளில் இன்று (19) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மேலும், ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


