தேசிய சுற்றாடல் தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

தேசிய சுற்றாடல் தினம், தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் என்பவற்றை முன்னிட்டு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேசத்தில் உள்ள சகல திணைக்களங்கள் இணைந்து நடாத்திய சிரமதான நிகழ்வு நேற்று (17) வாழைச்சேனை 206, 206D ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.டி.எம்.நஜீப்கான், கோறளைப்பற்று மத்தி பிரிவிற்கான க்ளீன் சிறிலங்கா இணைப்பாளரும், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான ஏ‌. எல். சமீம், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, 7வது கெமுனு இராணுவ படைப் பிரிவு அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மீன்பிடி பரிசோதகர், ஆகியோருடன் நியூ ஸ்டார் விளையாட்டு கழகம், கோறளைப்பற்று மத்தி இளைஞர் கழகம், அல் அமான் மற்றும் அஸ் ஸபா ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், துறைமுக அபிவிருத்தி சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், போன்றவை இணைந்து பாரிய பங்களிப்பினை வழங்கின.

இந்நிகழ்வுக்கான அனுசரணைகளை அசாருதீன் புரூட் சொப், அஸீஸ் ஹாஜியார், அஸ்-ஸபா, அல்-அமான் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், வாழைச்சேனை பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியன வழங்கியிருந்தன.