சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை பாடகர் கணேஷன் சங்கீத்சனுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.