தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் இன்று (12) தங்க விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் நேற்று (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (12) 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 9200 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.