சுவிஸ் ஈழத் தமிழ் வணிகர்களுக்கிடையிலான வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்தவும், புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் “வணிகப்பாலம் 2026″ என்ற மாபெரும் நெட்வொர்க்கிங் மற்றும் மெண்டர்ஷிப் மாநாடு எதிர்வரும் ஜூன் 14 அன்று மேகன்விலில் (Mägenwil) நடைபெறவுள்ளது.
சுவிஸ் தமிழ் பொருளாதார மேம்பாட்டு அமைப்பினால் (STEDO) மிகப்பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, “உழைப்பால் இணைவோம், உயர்வாள் நிமிர்வோம்!” என்ற உன்னத தாரக மந்திரத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் வர்த்தகப் பெருமக்கள், இளம்தொழில்முனைவோர் மற்றும் புதிய யோசனைகளுடன் முதலீட்டாளர்களைத் தேடும் ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணையும் ஒரு முக்கிய கூட்டுத்தளமாக இம்மாநாடு அமையவுள்ளது.
மாநாட்டின் மூன்று முக்கிய தூண்கள் (Core Pillars):
இம்முறை “வணிகப்பாலம் 2026” மாநாடானது பங்கேற்பாளர்களுக்கு முழுமையான வணிகப் பலன்களை வழங்கும் நோக்கில் மூன்று முக்கிய பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது:
1 அனுபவப் பகிர்வு: சுவிஸ் மண்ணில் ஏற்கனவே தடம் பதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் முன்னணி தமிழ் வணிகர்களின் சவால்கள், அவர்கள் கையாண்ட உத்திகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகப் பேசப்படும்.
2 முதலீட்டு வாய்ப்புகள்: புதிய மற்றும் தனித்துவமான வணிக யோசனைகளைக் கொண்டிருப்பவர்கள் (Ideas), தங்களின் திட்டங்களை முதலீட்டாளர்கள் முன்னிலையில் சமர்ப்பித்து, வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பிரத்தியேக தளம் வழங்கப்படுகிறது.
3 வலைப்பின்னல் (Networking): சக தமிழ் வணிகர்களுடன் நேரடியாகக் கைகோர்த்து, புதிய வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், தொழில் கூட்டுறவை (Partnerships) உருவாக்கவும் இது ஒரு சிறந்த களமாக அமையும்.
நிகழ்வுப் விபரங்கள் (Event Details):
தேதி: 14.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10.00 AM மணி முதல்
இடம்: Schulhaus Oberfeld (Schulweg 1, 5506 Mägenwil)
நுழைவுக் கட்டணம் (Entry Fees): 50 CHF
“ஒவ்வொருவருக்கும் நிச்சயம் பயனுள்ள ஒரு பொழுதாக அமையும்” என உறுதியளிக்கும் சுவிஸ் தமிழ் பொருளாதார மேம்பாட்டு அமைப்பு (STEDO), உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும், புதிய வணிகத் தொடர்புகளை உருவாக்கவும் இந்த மாபெரும் வாய்ப்பினைப் பயன்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறது.
மேலும் விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு:
+41 79 591 05 55
+41 79 218 70 75
www.stedo.ch | [email protected]
Your message has been sent


