நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிப்பு!

மின்சாரக் கட்டமைப்பின் சமநிலையைப் பேணிக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3.00 மணியளவில் மீண்டும் வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.