வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான உடன்பாடு குறித்த தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தின் மீதான நீண்டகாலக் கட்டுப்பாடுகள் உலகப் பொருளாதாரத்தை முடக்கும் என்ற இந்த அச்சம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன.
இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் (Brent Crude) விலை, ஒரு பீப்பாய் 4.64 டொலர் அல்லது 4.48 சதவீதம் வீழ்ச்சியடைந்து 98.90 டொலராக குறைந்துள்ளது.
இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய் 4.42 டொலர் அல்லது 4.58 சதவீதம் வீழ்ச்சியடைந்து 92.18 டொலராகக் குறைவடைந்துள்ளது.


