மீண்டும் உயர்வடைந்த தங்கம்!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (21) திடீர் அதிகரிப்புப் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6,000 ரூபாயினால் விலை அதிகரித்துள்ளது.

சர்வ தேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் நாணய மாற்று விகிதத் தாக்கம் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,755 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்பட்ட நிலையில், இன்றைய அதிரடி விலை அதிகரிப்பு நகை வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் ஒருவிதப் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.