நாட்டின் சிறுபோக பயிர்ச்செய்கைக்குத் தேவையான 15,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைப் குழுக்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்துக்கு 550,000 ஹெக்டேயர் நெல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலைகளின்படி அது 450,000 முதல் 500,000 ஹெக்டேயர் வரையான பரப்பளவாகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அளவிலான நிலப்பரப்பில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு சுமார் 75,000 மெட்ரிக் டொன் யூரியா உரம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


