அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில், ஈரான் மீதான திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக வெளியான தகவல்களையடுத்து, ஆசிய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க மசகு எண்ணெய் விலை 2 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் மிகவும் சுறுசுறுப்பாக வர்த்தகம் செய்யப்படும் அமெரிக்காவின் WTI இன் ஜூலை மாதத்திற்கான மசகு எண்ணெய் ஒப்பந்த விலை 2.08 டொலர்கள் அல்லது 2.02 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதன்படி, மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 102.34 டொலர்கள் என்ற அளவில் வர்த்தகமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


