மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ ஸனீர் அவர்கள் இன்று (12) ஒய்வு பெற்று செல்கின்றார்.
விவசாய துறையில் சிறந்த சேவையும் மிகுந்த அனுவம் வாய்ந்த பணிப்பாளர் மாத்தறை மாவட்டத்தில் கொட பிட்டிய சதாத் மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் உயர்கல்வியை கற்று 1987 ஆண்டு குண்டக சாலையில் விவசாய டிப்ளோமாவையும் கிழக்கு பல்கலைக் கழகத்தில் BSE விவசாய இளமானிப்பட்டத்தையும் 2008 ஆண்டு றுகுணு பல்கலைக்கழகத்தில் MSE முதுமாணி விவசாய பயிர்பாதுகாப்பு கற்கை நெறியினை பூர்த்தி செய்துள்ளார்.
1990 ஆண்டு கண்டியில் சத்தியோதய அரச சார்பற்ற நிறுவனத்தில் விவசாய பயிற்றுவிப்பாளராக தனது ஆரம்ப தொழிலை மேற்கொண்டார்.
1993 ஆண்டு இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிலையத்தில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி தென்மாகாண விவசாய திணைக்களத்தில் விவசாய போதனா ஆசிரியராகவும் பாடவிதான உத்தியோகத்தராக 18 வருடங்கள் கடமையாற்றி இலங்கை தொழில் நுட்ப சேவையில் சுப்ரா தரதிற்கு உயர்வு பெற்றார்.
2011 வருடம் விவசாய சேவை பரீட்சையில் சித்தி பெற்று உதவி விவசாய பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று அம்பாறை மாவட்டத்தில் கடமைகளை மேற்கொண்டார்.
அம்பாறை மாவட்டத்தில் விவசாய செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி சிறந்த விளைச்சளை மக்கள் பெறுவதற்கு அளப்பரிய சேவையாற்றினார்.
மேலும் பாலமுனை விவசாயக் கல்லூரியினை தோற்றுவித்து ஸ்தாபக அதிபராக கடமையாற்றி இப்பிரதேச இளைஞர்களுக்கான கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தியுள்ளார்.
2017 ஆண்டு அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளராக கடமை மேற்கொண்டு 2024 ஆண்டு டிசம்பர் மாதம் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்று மாவட்டத்தின் விவசாய செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான அளப்பெரிய சேவையாற்றினார்.
மேலும் 2024 ஆண்டு தென்கொரியா நாட்டில் பசுமை உற்பத்தி திறன் தொடர்பான நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொண்டு விசேட பயிற்சியை பெற்றுள்ளதுடன் 2006 ஆண்டு இஸ்ரேல் நாட்டில் ஒன்றினைந்த பீடை கட்டுப்பாடு தொடர்பான புது தொழில் நுட்பம் மற்றும் ஆய்வு மற்றும் ஆய்வு அபிவிருத்தி தொடர்பான தொழில்நுட்ப அறிவையும் பெற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து 2009 ஆண்டு அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்டு ஜெய்கா நிறுவனத்தின் அனுசரனையில் இந்தோனேசிய நாட்டில் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பான சிறப்பு பயற்சிகளை பெற்றுள்ளார்.
அத்துடன் 2005 ஆண்டு சீன நாட்டில் களப்பின நெல் உற்பத்தி தொடர்பான பயிற்சிகள் மற்றும் 2025 ஆண்டு தென்கொரியா நாட்டில் இலங்கை தோட்ட கலைத்துறையின் திறன் மேம்பாடு தொடர்பான சிறப்பு பயிற்சிகள் பெற்றுக் கொண்டார்.
பல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மாவட்ட விவசாய பணிப்பாளர் ஓய்வு பெற்று செல்கின்றமை மாவட்டத்திற்கான ஓர் இழப்பாக காணப்படுகின்றது.
தற்போது மீயல்ல பிரதேசத்தில் வசிக்கும் மாவட்ட பணிப்பாளர் ஏ.சி.எம் பாரூக் அதிபரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


