சமூக செயற்பாட்டாளர் சா.பேரின்பநாயகம் மரணம்.

எருவில் கிராமத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சா.பேரின்பநாயகம் 05.05.2026ந் திகதி இயற்கை எய்தினார்.

இவர் கடந்த 35வருட காலமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அபிவிருத்திக்குழு செயலாளராக பெரும் பணியாற்றியுள்ளதுடன் திடிர் மரண விசாரணை அதிகாரியாகவும் பலவருடம் கடமையாற்றினார். மேலும் எருவில் பெத்தான்குடி மக்களின் சிறப்புக்குரிய தலைவராகவும் கிராமத்தின் பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களின் பெருந் தலைவராகவும் செயற்பட்டதுடன் சிறந்த சமய சமூக பணியாற்றிய தலைவராவும் காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.