வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி நடை பெற ஏற்ப்பாடு!

( வி.ரி. சகாதேவராஜா)
பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் எதிர்வரும் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ இதற்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

சித்தர்களின் ஆதி இருப்பிடமுமான போகர் பெருமான் சிகண்டி முனிவர் ரூபத்தில் இன்றும் சித்தர்களோடு வாழும் இலங்கையில் சித்தாண்டி வேலோடும் மலையில் காகபுஜண்டர் அருளாணைப்படி இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களின் அருளாசியை வேண்டி, வரும் சித்ரா பௌர்ணமியன்று (01/05/2026) வெள்ளிக்கிழமை தொடங்கி நூறு கோடி சிவ பஞ்சாட்சர ஜெபத்துடன் (26/11/2026) வியாழக்கிழமை வரை தொடர்ந்து 210 நாட்கள் காலையும் மாலையும் இதுவரை உலகில் எங்குமே நடந்திராத அளவுக்கு அபூர்வ சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு அதி சக்தி வாய்த்த சித்தர்கள் வேள்வி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சித்தர்களுக்காக குருபூஜை செய்து அந்தந்த சித்தர்களை பூஜித்து அவர்களுக்குரிய வழிபாட்டை செய்து வேள்வி நடைபெறும்.

பங்கேற்க விரும்புவோர்
தியாகராஜ சுவாமிகள்: (வேலோடுமலை ஆதீன கர்த்தா)
+94 77 962 2206
நமசிவாய சுவாமிகள்: +94 77 639 2368
முரளி ஐயா: +94 77 445 2203 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.