‘XChat’ வட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வருகிறது!

ஈலான் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனம், தனது பயனர்களுக்காக ‘XChat’ எனும் புதிய பிரத்யேக குறுஞ்செய்தி செயலியை (Messaging App) iOS சாதனங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி மூலம், பயனர்கள் தங்களது ‘X’ கணக்கிலுள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி குரல் அழைப்புகள், காணொளி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் கோப்புகளைப் (Files) பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்தச் செயலி ‘எண்ட்-டு-எண்ட்’ என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இதில் விளம்பரங்களோ அல்லது பயனர்களைக் கண்காணிக்கும் முறையோ இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

குருஞ்செய்திகளை திரிவுபடுத்தி செய்தல், அழித்தல் மற்றும் தானாகவே மறையும் (Disappearing messages) வசதிகள் உள்ளன.

குறிப்பாக, ஸ்கிரீன்ஷொட் எடுப்பதைத் தடுக்கும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் வழங்குவதே ஈலான் மஸ்க்கின் திட்டமாக இருந்தது.

ஆனால், தற்போது ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை உருவாக்கும் புதிய வியூகத்தை ‘X’ நிறுவனம் கையாளுவதாகத் தெரிகிறது.

இதன் ஒரு பகுதியாகவே இந்த ‘XChat’ அறிமுகமாகியுள்ளது.

தற்போது ஐபோன் (iOS) பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள இச்செயலி, விரைவில் ஏனைய சாதனங்களுக்கும் விரிவாக்கப்படவுள்ளது.

அத்துடன், ‘X’ நிறுவனம் தனியான ஒரு பணப்பரிமாற்ற முறையையும் தற்போது சோதித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் வட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் போன்ற செயலிகளுக்கு ‘XChat’ பலத்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.