சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில், இன்று(25) தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, மத்திய கிழக்கு போர் ஆரம்பமான காலப்பகுதியில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலரை கடந்திருந்தது.

எனினும், தற்போது ஒரு அவுண்ஸ் தங்கம் 4,708 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது.

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.69 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் இன்று இலங்கையிலும் தங்கவிலை வீழ்ச்சியை பதிவு செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.