மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பலத்த பாதுகாப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மானிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் சியோன் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் உள்ளிட்ட மாநகர சபையின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்ததோடு, உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதே வேளை மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.