வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு சாத்ததுதல் நிகழ்வு இன்று (21) செவ்வாய்க் கிழமை காலை ஆரம்பமாகியது.
காலையில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் சாரிசாரியாக வந்து எண்ணெய்க் காப்பு சாத்தினர்.
அந் நிகழ்வு நாளை(22) புதன்கிழமையும் தொடரும் என ஆலய தர்மகர்த்தாக்களான இரா.திருநாவுக்கரசு, கே.ஜெகமோகன் ஆகியோர் தெரிவித்தனர்.
நாளை மறுநாள் (23) வியாழக்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.


