ஆட்சியை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதுவருட கொண்டாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்புக்கு மத்தியில் பொதுமக்கள் இம்முறை புதுவருடத்தை கொண்டாடவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஆட்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் அந்த பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.


