கடந்த சில நாட்களாக உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு மற்றும் சர்வதேச அரசியல் சூழல்கள் காரணமாக தங்கத்தின் விலையில் ஒருவித ஸ்திரத்தன்மை காணப்படுகிறது.
அதற்கமைய, இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்து, 4 ஆயிரத்து 747 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளியின் விலையும் வீழ்ச்சியை பதிவு செய்து, 75 டொலர்களாக விற்பனையாகின்றது.
இதேவேளை, இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை அமெரிக்காவில் 157.50 டொலர்களாகவும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 572.25 டொலர்களாகவும், சவுதி அரேபியாவில் 589 ரியால்கள் வரையிலும் விற்பனையாவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உள்நாட்டுச் சந்தையில் நேற்யைதினம், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 49 ஆயிரத்து 750 ரூபாயாக விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.

