(சுமன்)
கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் “Clean Srilanka” திட்டத்தின் கீழ் “CLEAN BEACH” எனும் தொனிப்பொருளில் கல்முனை மாநகர சபை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து கல்முனை தொடக்கம் பெரியநீலாவணை வரையுமான கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்யும் சிரமதானப்பணி (11.04.2026)இன்று காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்றது.
கல்முனை மண்ணையும், மண்ணின் இயற்கையினையும், அழகினையும், இருப்பையும் நேசித்துக் காத்து வரும் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் இச் சமூகப் பொறுப்புமிக்க பணியில் கல்முனை மாநாகர சபை ,கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாதர் அபிவிருத்திச் சங்கங்கள்,விளையாட்டுக் கழகங்கள், மீனவர் சங்கங்கள், மற்றும் கடற்படையினர்,கல்முனை பொலீசார், உள்ளிட்ட பலர் பங்கெடுத்து சிறப்பாக நடாத்தியிருந்தனர்.
சமூகப் பொறுப்புமிக்க இப்பணியில் பங்கெடுத்திருந்த அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்திருந்த இளைஞர் சேனை நிருவாகத்தினர், தமது இவ்வாறான பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும், இயற்கையினையும் கல்முனை மண்ணையும் நேசிப்பவர்களாகத் தாம் எப்போதும் இருப்போம் எனவும் தெரிவித்தனர்


