தொடருந்துகள் மற்றும் தொடருந்து நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, நாடு முழுவதும் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுக்குமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, மீனகயா இரவு நேர தொடருந்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது, குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்தகைய முறைகேடுகளால் பாதிக்கப்படும் நுகர்வோர், உடனடியாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறியத்தருமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


