எமக்கான பலம் பெரிய ஆயுதம் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து நிற்பதுதான். இராசையா வாகீசன்

எம்மிடம் உள்ள பெரிய ஆயுதம், பலம் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து நிற்பதுதான். தமிழர்கள்தான் மற்றவர்களைவிட ஒற்றுமையானவர்கள் என நான் நினைக்கின்றேன். சில கறைகள்தான் பிரிவினைக்கும் ,பிரதேசவாதங்களுக்கும் காரணம்.பிரதேவாதம் சம்பந்தமாக கதைப்பவர்களை நாம் மதிப்பதில்லை. இவ்வாறு எங்கட பெடிகள் இராசையா வாகீசன் தெரிவித்தார்.

Win Production  நிறுவனத்தின் சார்பில் இராசதுரை கேதீஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில்   சுவிஸ் வர்த்தக பெருமக்களின்  பங்களிப்பில், எங்கடபெடிகள் எனும் ஈழக்கலைஞர்களின் நிகழ்வில் பங்கெடுக்க தற்போது சுவிஸ் நாடடில் தங்கியுள்ள எங்கட பெடிகள் வாகீசன் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

சூரிச் ஐயா உணவகத்தில்  கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுவிஸ் தமிழர் ஊடகமைய ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு ரெிவித்தார்.

எங்கட பெடிகள் ரிசோன், அத்விக் உட்பட பலர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் வாகீசன் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்

எங்கடபெடிகள் என்பது வெறுமனே கலை மட்டுமல்ல எமது மண் சார்ந்தும், நிலம் சார்ந்தும் நிற்பவர்களும்தான்  அவர்களுக்கான ஒத்துழைப்பையும் ,ஆதரவினையும்  சுவிஸ் வர்த்தக சமூகம் வழங்கவேண்டும்.

அருணகிரிநாதர்தான் முதலாவது சொல்லிசையாளராக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து, காரணம்  அவரின் பாடல்களில் சந்தை இசையுடன் சொல்லிசை மருவினமாதிரி பாடல்கள் உண்டு முருகப்பெருமான் சாதாரண கடவுள் அல்ல புரட்சிக்கடவுள் படை நடாத்திய கடவுள் அவரை நினைத்து சாதாரணமாக பாடமுடியாது.

அடையாளம் காணமுடியாத நமது தாயக சொல்லிசைக்கலைஞர்கள் பலர் இருந்துள்ளார்கள் நாம் வெளியல் தெரிந்தவர்களை மட்டும்தான் கொண்டாடுகின்றோம் எங்கடபெடிகள் என்பது வெறுமனே ஒருபாட்டு மேடைமட்டுமல்ல ஒரு புரட்சி.

எங்கட பெடிகள்  நமக்கான தளம் இதில்பங்குபற்றுவதற்கு சகலருக்கும்  வாய்பு்புண்டு இந்த வாய்ப்பை  நாம்  உருவாக்கித்தருவோம். எங்களுடைய நோக்கமும் ஆசையும் எங்களுக்கான அடையாளங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கனும் இந்த வி்டயங்கள் அயடுத்த சந்ததிக்கு போய்சேரவேண்டும் என்றார்.