மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் இன்று (10) கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் பு. திவிதரன், கணக்காளர் வி. கணேசமூர்த்தி மற்றும் தமிழ் பாட இணைப்பாளர் பு. சதீஸ்குமார் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவர்களுடன் அதிபர்கள், இணைப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், நடுவர்கள், மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற எழுத்தாக்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினப் போட்டிகள் தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்கள் மாணவர்களுக்கும், நடுவர்களுக்கும், இணைப்பாளர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.







