டித்வா (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதம்பாவா எம்.பி.யினால் வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அண்மையில் ஏற்பட்ட டித்வா (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை உற்பத்தி பண்ணையாளர்களுக்கான அரசாங்கத்தின் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அனுசரணையில் (02) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் இலங்கை அரசியல் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி போன்ற பிரதேச பயனாளிகளுக்கு இழப்பீட்டுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மேற்படி பிரதேசங்களுக்கான கால்நடை உற்பத்தி சுகாதார வைத்திய அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர்,
பயனாளிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் இறுதியில் இழப்பீட்டினை பெற்றுக்கொண்ட பயனாளிகள்
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்தனர்.