ஊடகத் கற்கை உயர்தர பரீட்சையில் சாதனை

ஹஸ்பர் ஏ.எச்_

வெளியாகிய கல்வி 2025 ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிண்ணியா பெரியாற்றுமுனையை சேர்ந்த தி/கிண்ணியா முஸ்லீம் மகளிர் கல்லூரி மாணவியான யாசீர் பாதிமா நுஸ்பா தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கையில் விசேட சித்தி பெற்றுள்ளார்.
ஊடக கற்கை துறையில் சாதிக்க துடிக்கும் இம் மாணவி என்சுலுன் யாசீர் மற்றும் அலி முகம்மது பாதிமா இன்சுரா ஆகிய தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியுமாவார்.

இம் முறை வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் புவியியல் பாடத்தில் A சித்தியும், ஊடக கற்கையில் B, இஸ்லாம் பாடத்தில் B சித்தியும் அடைந்துள்ளார்.

ஊடகத் துறையின் மீது கொண்ட அதிக ஆர்வம் தன்னை இத் துறைக்கு ஈர்த்துள்ளதாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.