தொடர்ந்து உயர்வடையும் மசகு எண்ணெய்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116.1 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

ஒரு பேரல் WTI மசகு எண்ணெயின் விலை 102.9 அமெரிக்க டொலராகப் பட்டியலிடப்பட்டுள்ளது.