பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

0-0x0-0-0#

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா இன்று(28) சனிக்கிழமை வித்தியாலய அதிபர் வ. சுப்பிரமணியம் தலைமையில் வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.

2021ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், சாதாரண தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், வகுப்பு ரீதியாக முதன்நிலை பெற்ற மாணவர்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதித்த மாணவர்கள், வரவில் அதிகூடிய வீதத்தினை பெற்ற மாணவர்கள் ஆகியோர் இதன் போது பாராட்டப்பட்டு பரிசில், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

இந்நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ.திரேஸ்குமாரன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பு. திவிதரன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன், பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் த. குணரெத்தினம், கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பாட இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0-0x0-0-0#
0-0x0-0-0#
0-0x0-0-0#