ஆரையம்பதியில் கிராம மட்ட அமைப்புக்களுக்கிடையிலான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம மட்ட அமைப்புக்களுக்கிடையிலான கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26)/இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ. சுதர்சன் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் சார்பாக தலைவர் செயலாளர் பொருளாளர் என பலர் கலந்து கொண்டனர்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரில் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளரின் தலைமை உரையும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளரினால் வேலை திட்டங்கள் ஒப்பந்தங்கள் தொடர்பான விளக்க உரையும் பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தரினால் திட்டங்கள் தெரிவு செய்யப்படுதல், நடைமுறைப்படுத்தல், திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள், திட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற சகல சந்தேகங்களும் தெளிவுபடுத்தப்பட்டது