நாட்டின் சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 3,900 மெட்ரிக் தொன் லிற்றோ எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (21) நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று வருகை தரும் கப்பலையும் சேர்த்து, இந்த மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை மொத்தம் ஏழு எரிவாயு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இந்த ஏழு கப்பல்கள் மூலம் இதுவரை மொத்தம் 27,300 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மாத இறுதிக்குள் மேலும் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்து வருவதால், நுகர்வோருக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் சமையல் எரிவாயு கொள்கலன்களை தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


