எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கனிய வளங்கள் குறித்த உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19) இடம் பெற்றது.
மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் இதன் போது வழங்கப்பட்டதுடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக துரித சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார். மேலும் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர்,உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், நீர்பாசன பணிப்பாளர், பிராந்திய கனியவள பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை உதவி பணிப்பாளர், மகாவலி அதிகாரசபை திட்ட முகாமையாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் டித்வா புயலினால் வயல் நிலங்களில் மூடியுள்ள மணலை அகற்றுவதற்கும், அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு தேவையான மண் அகழ்வை உரிய முறையில் வழங்குவதற்கு இதன் போது கலந்துரையாடப்பட்டது.


