எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான விழிப்புனர்வு வழிகாட்டல் நிகழ்வானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில்
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.கீர்த்திகா தலைமையில்
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (18) இடம் பெற்றது.
இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால்
சுகாதார நடைமுறைகள், உணவு சேமிப்பு, சட்டப் பொறுப்புகள் மற்றும் அனுபவங்கள் சார்ந்து விளக்கமளிக்க பட்டதுடன் , உணவகங்களில் உள்ள உணவின் தரம் சம்மந்தமாக மக்கள் முறைப்பாடளிக்கும் தொலை பேசி இலக்கம் அடங்கிய sticker ஒவ்வொரு உணவகங்களிலும் இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டது
உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன் ஆரோக்கியமான உணவு உற்பத்தியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உணவினை வழங்க வேண்டும் என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் , மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள்
உணவக உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் என பலர்கலந்து கொண்டனர்..


