மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல்யமான கெனடி விளையாட்டு கழகமானது 68 வருடகால வரலாற்றை கொண்ட ஒரு முன்னணி விளையாட்டுகழகமாகும் மாகாண, தேசிய மட்டத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி குறித்த பிரதேசத்துக்கு பெருமைகளை தேடி கொடுத்து வரும் ஒரு கழகமாகும்.
நீண்ட காலமாக குறித்த விளையாட்டு மைதான காணியானது கழகத்தின் பராமரிப்பில் இருந்த வந்ததுடன்
கழகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக இருந்த விளையாட்டு மைதான காணியானது குறித்த கழகத்துக்கு உத்தியோக பூர்வமாக வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் காணி சீர்திருத்த அதிகாரசபையின் மாவட்ட பணிப்பாளர் மற்றும் காணி பயன்பாட்டு கொள்ளை திட்டமிடல் திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் , கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


