( வி.ரி.சகாதேவராஜா)
ஸீறா பவுண்டேசன் – ஸ்ரீலங்கா அமைப்பினால் 12 வது வருடமாக அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளுர் நல்லுள்ளங்களின் நிதியுதவியின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த நிகழ்வானது, அமைப்பின் ஸ்தாபகரும், ஒருங்கிணைப்பாளருமான யூ.கே. காலித்தீனின் தலைமையில் நடைபெற்றது.
அமைப்பின் பணிப்பாளர் சபையின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளருமான அல் ஹாபில் அஷ்ஷேய்க் மௌலவி நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி) நெறிப்படுத்தலில் நேற்று மாலை 16ம் திகதி சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இக்கால கட்டத்தில் வருமானம் எதுவுமின்றி குறிப்பிட்ட நிதிக்குள் இறைவனின் உதவியினால் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு பெருமதி வாய்ந்த ஒரு தொகை உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் கல்முனை அல்ஹாதி அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் முப்தி கே.எல்.எம். சியானுத்தின் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு “முஅத்தின் மற்றும் இமாம்கள் என்றால் யார்” இவர்களின் கண்ணியம் என்ன எனும் தலைபையில் சிறப்புரை ஆற்றினார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமா சபையின் சிரேஷ்ட உறுப்பினரும், மாவடிப்பள்ளி சஹ்தி அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷேய்க் மௌலவி ஐ.எம். ரஹ்பி (ஹிழ்ரி) யினால் விஷேட துஆ பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டது.
புத்தளம் மதுரங்குளி அல் ஜாமிய்யத்துல் அஷிஸியா அரபுக் கல்லூரியின் பார்த்து அதிபர் ஏ.எம்.எம். ஆரிப் (அஷிஸி), சாய்ந்தமருது மாளிகைக்காடு கதீப் முஅத்தீன் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஸீறா பவுன்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.


