வாழைச்சேனை யில் “சொந்தமாக இருக்க இடம் அழகான வாழ்க்கை” வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

வீட்டுரிமை அற்ற எமது நாட்டில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அழகான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் முதன்மைப் பணி ” என்ற தொனிப்பொருளில் “சொந்தமாக இருக்க இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை 206D, 206 A மற்றும் 206 C கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளியின் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (12/03/2026) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாறக் தலைமையில் இடம் பெற்றது.

இதில் பிரதேச பிரஜா சக்தி தவிசாளர்கள், உறுப்பினர்கள், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.