( வி.ரி. சகாதேவராஜா)
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்.
அவருடன் லாகுகலை பிரதேச செயலாளர் எஸ்.நவநீதராஜா காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பிரணவரூபன், சீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பதவியேற்பு விழாவிற்கு தம்பலகாமம் சென்றிருந்தனர்.
அங்கு பிரதேச செயலாளராக இருந்த திருமதி ஸ்ரீபதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராக பதவியுயர்வு பெற்ற காரணத்தால் அங்கு வெற்றிடம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவைச் சேர்ந்த சதிசேகரன்( சதீஷ்) இறுதியாக லாகுகல உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றியிருந்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் சதீஷ் , காரைதீவில் பயின்று, திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரம் இந்து கல்லூரியில் 2012 முதல், ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.
பின்னர், காரைதீவு பிரதேச செயலகத்தில் 2013- 2015 காலப் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவேளை இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார்.
2015- 2019 காலப் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச உதவி செயலாளராகவும், 2019-2024 காலப் பகுதியில் திருக்கோவில் பிரதேச உதவி செயலாளராகவும் சேவையாற்றினார்.
2024 முதல் 2026 இன்று வரை லாகுகல உதவிப் பிரதேச செயலாளராக சேவையாற்றியிருந்தார்.
இதுவரைகாலமும்(11 வருடங்களாக) உதவி பிரதேச செயலாளராக சேவையாற்றி வந்த அவர், இன்று முதல் பதவி உயர்வு பெற்று பிரதேச செயலாளராகிறார்.


