புதிய அரச அதிபர் பங்கேற்ற நாவிதன்வெளி இப்தார் நிகழ்வு

வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் விசேட நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரனின் தலைமையில், பிரதேச செயலகத்தின் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சரது ஒருங்கிணைப்போடும் நேற்று (12.03.2026) வியாழக்கிழமை பிரதேச செயலக முன்றலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக நேற்று முன்தினம் கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட அனுபமா மங்கள விக்கிரமாராய்ச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற பின் கலந்து கொண்ட முதலாவது வெளி நிகழ்வு இதுவாகும்.