2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம் நேற்று (11) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் ஏ. றொபேர்ட், மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ. எஸ் சசிகரன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். கங்காதரன், கணக்காளர் திருமதி. ரி. சசிகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பி. ஜெயக்குமார் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2026 பெப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு திணைக்கள ரீதியான அடைவுகளின் செயல்திறன், நிதி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், செலவின முன்னேற்றம் ஆகியவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பிரதேச செயலகத்தினுள் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.