இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின் (Open Parliament Caucus) இணைத்
தலைவரான நான் , “Open Government Partnership (OGP) Ambition” என்ற
தலைப்பில் நடைபெற்ற பிராந்திய கற்றல் பரிமாற்ற நிகழ்வில் கலந்து
கொண்டேன். இந்த நிகழ்வு 2026 மார்ச் 10ஆம் தேதி தாய்லாந்தின்
பாங்காக்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு Westminster Foundation for Democracy (WFD) அமைப்பினால்
ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இலங்கை, இந்தோனேசியா, மாலத்தீவு மற்றும்
தாய்லாந்து ஆகிய நாடுகளில் திறந்த ஆட்சி சீர்திருத்தங்களை ஆதரிக்கும்
அதன் பிராந்திய திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க பிரதிநிதிகள்
மற்றும் குடிமக்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு Open
Government Partnership (OGP) கட்டமைப்பின் கீழ் அனுபவங்களைப் பகிர்ந்து
கொண்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்புக்கள் இங்கு கிடைக்கப்பெற்றன
. மேலும் ஆட்சி முறையில் தெளிவுத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும்
குடிமக்கள் பங்கேற்பை மேம்படுத்துவது, அதேபோல் திறந்த ஆட்சி
சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் பாராளுமன்றங்களின் பங்கை
வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றது.
இலங்கையில் பாராளுமன்றத் திறந்த தன்மையையும் நிறுவனத்
தெளிவுத்தன்மையையும் வலுப்படுத்துவது மிக முக்கியமானது. திறந்த
பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவராக, பொது நம்பிக்கையை உயர்த்தவும்,
தகவல்களுக்கான அணுகலை மேம்படுத்தவும், சட்டமன்ற செயல்முறைகளில்
குடிமக்கள் பங்கேற்பை விரிவுபடுத்தவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய
பங்காற்ற வேண்டும் .
மேலும், இந்த பிராந்திய கற்றல் பரிமாற்றம் மூலம் திறந்த ஆட்சி
உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்,
சிறந்த நடைமுறைகள் மற்றும் பாராளுமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும்
குடிமக்கள் சமூக அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்தும் வழிகள் குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டது.
இத்தகைய பிராந்திய சந்திப்புகள் இலங்கையில் ஜனநாயக ஆட்சி மற்றும் திறந்த
பாராளுமன்ற முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை
வழங்குகின்றது.


