துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு

துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது

துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ள மக்களின் தகுதியை சரிபார்த்து உண்மையில் காணியற்றவர்களாக உள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கில் நேர்முகத் தேர்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நேற்று (10.03.2026) அணிஞ்சியன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் காணியற்றவர்களாக பதிவு செய்துள்ள 111 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு காலை 10.00 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நேர்முகத் தேர்வில் 66 விண்ணப்பதாரிகள் நேரில் கலந்துகொண்டு தங்களது விபரங்களை சமர்ப்பித்தனர்.

இந்நிகழ்வு துணுக்காய் பிரதேச செயலாளர் திரு. இ. ரமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன்,
காணி கிளை உத்தியோகத்தர்கள், குறித்த கிராம சேவையாளர், மற்றும் சமூக மட்ட அமைப்புகளான கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், கமக்கார அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விண்ணப்பதாரிகளின் தகவல்கள், வாழ்வாதார நிலைமை மற்றும் தகுதிகள் தொடர்பாக விரிவான பரிசீலனைகளை மேற்கொண்டனர்.

இந்த செயல்முறை மூலம் உண்மையில் காணியற்ற நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களை சரியாக அடையாளம் காணுதல் மற்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு சட்டப்பூர்வமான காணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுதல் முக்கிய நோக்கமாகக் கொண்டதாகும்.

துணுக்காய் பிரதேச செயலகம், பிரதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.